உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் “உலக வாய் சுகாதார தினத்தை” முன்னிட்டு “WALKATHON 2022” வில் பங்கேற்றனர்.
இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். டாக்டர் வித்யா(COO), டாக்டர் R.சுதாகர், டாக்டர் S.அப்துல் காதர், டாக்டர் G.ஷோபனா மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
40 மாணவ மாணவியர்கள் காலை 7 மணிக்கு கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் தொடங்கி புஸ்ஸி ஸ்ட்ரீட், எம்.ஜி ரோடு, ஜே.என் ஸ்ட்ரீட், மிஷன் ஸ்ட்ரீட் வழியாக மீண்டும் காந்தி சிலைக்கு வந்தடைந்தனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி சார்பில் புதுவை அரசாங்கத்திற்கு 50 விழிப்புணர்வு விளக்கப்படம் வழங்கப்பட்டது.
What's Your Reaction?






